மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் பேச்சு போட்டியில் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரிசுகளை வழங்கினார்.

Published Date: August 15, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு கேடயம் சான்றிதழ்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். 

மதுரை மாநகர் பகுதிகளில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு நிகழ்வாக மதுரை மாநகராட்சியின் 2,752 தூய்மை பணியாளர்கள் ஒரு மணி நேரம் 20 நிமிடத்தில் கலைஞர் உருவத்தை வடிவமைத்து உலக சாதனை டிரம்ப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். தொடர்ந்து மாநகராட்சியில் உள்ள 27 நடுநிலைப்பள்ளிகள், 24 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நடந்தது.  இதில் 6,7,8ம் வகுப்புகள் பயிலும் 89 மாணவ மாணவிகள் 9, 10ம் வகுப்புகள் பயிலும் 40 மாணவ மாணவிகள் 11,12ம் வகுப்புகள் பயிலும் 23 மாணவ மாணவிகள் என மொத்தம் 152 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை வென்ற 43 மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், கமிஷனர் பிரவீன் குமார், துணை கமிஷனர் சரவணன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன், பட்டிமன்ற பேச்சாளர் கு. ஞானசம்பந்தன், தியாகராசர் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாநகராட்சி கல்வி அலுவலர் நாகேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், கவுன்சிலர் திருமுருகன், ஒருங்கிணைப்பாளர், சண்முக திருக்குமரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர் .

Media: Dinakaran